close
Choose your channels

'தளபதி 68' படத்தின் பட்ஜெட் ரூ.400 கோடி? விஜய்யின் சம்பளம் மட்டும் இவ்வளவா?

Tuesday, December 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 68வது படத்தின் பட்ஜெட் 400 கோடி என்றும் அதில் விஜய்யின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் கசிந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய்யின் 66வது திரைப்படமான ’வாரிசு’ படத்திற்கு அவருக்கு 125 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் இதைவிட அதிகமாகத்தான் ’தளபதி 67’ படத்திற்கு அவருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி ’தளபதி 68’ படத்திற்கு 150 கோடி ரூபாய் சம்பளம் வழங்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இந்த தகவல் உண்மை என்றால் தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் விஜய் தான் என்பது உறுதி செய்யப்படும்.

இந்த நிலையில் ’தளபதி 68’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை அட்லி இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை இயக்கும் இயக்குனர் அட்லிக்கு சம்பளமாக ரூபாய் 50 கோடி என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 400 கோடி என்றும் அதில் விஜய் மற்றும் அட்லியின் சம்பளம் மட்டும் 200 கோடி போக மீதமுள்ள 200 கோடியில் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் என்றும், இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்க சன்பிக்சர்ஸ் திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இயக்குனர் அட்லி தற்போது ஷாருக்கான், நயன்தாரா நடித்து வரும் ‘ஜவான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் அதேபோல் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’தளபதி 67’ படத்தில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த இரண்டு படங்களையும் இருவரும் முடித்த பின்னர் ’தளபதி 68’ படத்திற்காக இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘தெறி’, ‘மெர்சல்’ மற்றும் ‘பிகில்’ ஆகிய மூன்று படங்களும் சூப்பர் ஹிட்டாகி உள்ளன என்பது தெரிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos