சிஎஸ்கே ரசிகர்களை குஷிப்படுத்தும் டைட்டில்.. 'தளபதி 68' படத்தின் மாஸ் தகவல்..!

  • IndiaGlitz, [Monday,June 05 2023]

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் ’தளபதி 68’. இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் அறிவிப்பு வெளியானதிலிருந்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’தளபதி 68’ படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது இணையதளங்களில் கசிந்துள்ளது. இந்த படத்திற்கு ’சிஎஸ்கே’ என்ற டைட்டில் வைக்க இயக்குனர் வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கிரிக்கெட் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் வெங்கட் பிரபு என்பதும் குறிப்பாக சிஎஸ்கே அணியின் வெறித்தனமான ஆதரவாளர் என்பதும் தெரிந்ததே. அதேபோல் விஜய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிஎஸ்கே அணியின் பிராண்ட் அம்பாசிடராக இருந்தவர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சிஎஸ்கே என்ற டைட்டில் ’தளபதி 68’ படத்திற்கு வைப்பது உறுதி செய்யப்பட்டால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி சிஎஸ்கே ரசிகர்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி இந்த படத்தின் டைட்டில் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ரெட் ஹாட் ரகுல் ப்ரீத் சிங்.. மாலத்தீவில் வேற லெவல் கிளாமர்..!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் கடந்த சில நாட்களாக மாலத்தீவில் இருந்து வருகிறார் என்பதும் அங்கிருந்து கொண்டே அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யும் கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரல்

கையில் சரக்கு, ஸ்டார் ஹோட்டலில் ரூம்.. டிக் டாக் இலக்கியாவின் ஓவர் கிளாமர்..!

டிக் டாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இலக்கியா சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் கையில் சரக்குடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த

ஜெய்ப்பூரில் நடிகர் ஷர்வானந்த் திருமணம்.. க்யூட் புகைப்படங்கள்..!

 'எங்கேயும் எப்போதும்' 'ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை' உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்த நடிகர் ஷர்வானந்த்துக்கு திருமணம் நடந்த நிலையில் அது குறித்த புகைப்படங்கள்

எஸ்.எஸ்.ராஜமெளலி - மகேஷ் பாபு படத்தில் இந்த மாஸ் நடிகரா? சூப்பர் தகவல்..!

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி  இயக்கத்தில் உருவான 'ஆர்ஆர்ஆர்' என்ற வெற்றி திரைப்படத்திற்கு பின்னர் அடுத்ததாக அவர் மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது

'பிகில்' நடிகை பாண்டியம்மாளுக்கு திருமணமா? மாப்பிள்ளை யார் தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவான 'பிகில்' திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனை  பாண்டியம்மாள் என்ற கேரக்டரில் நடித்த ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு