close
Choose your channels

'தளபதி 67' படத்தின் மாஸ் டைட்டில் அறிவிப்பு..!

Friday, February 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

தற்போது காஷ்மீரில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இன்று மாலை ஐந்து மணிக்கு இந்த படத்தின் டைட்டில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் மாஸ் டைட்டில் வெளியாகியுள்ள நிலையில் அது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ’தளபதி 67’ படத்திற்கு ‘லியோ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் அந்த டைட்டிலை கொண்டாடி வருகின்றனர். மேலும் படக்குழுவினர் வெளியிட்டுள்ள 2.49 நிமிட வீடியோவின் இறுதியில் ‘பிளடி ஸ்வீட்’ என்ற விஜய்யின் வசனம் மாஸ் ஆக உள்ளதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த படம் 2023ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 67’ படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos