close
Choose your channels

ஜாலியோ ஜிம்கானா: ஜாலியான புகைப்படத்தை பகிர்ந்த பூஜா ஹெக்டே!

Friday, March 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது என்பதும் இரண்டு பாடல்களும் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. முதலில் வெளியான அரபிக்குத்து பாடல் இன்னும் டிரெண்டிங்கில் உள்ள நிலையில் அதனை அடுத்து வழியான ஜாலியோ ஜிம்கானா பாடலும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது

இந்த நிலையில் ஜாலியோ ஜிம்கானா பாடலின் படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படத்தை பூஜா ஹெக்டே தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து படப்பிடிப்பின்போதும் ஜாலியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, அனிருத் மற்றும் நெல்சன் ஆகியோர் ஜாலி மூடில் உள்ளது தெரிய வருகிறது. பூஜா ஹெக்டே இந்த புகைப்படத்தை பகிர்ந்து இரண்டு மணி நேரத்தில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் குவிந்துள்ளது

வரும் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ்உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.