close
Choose your channels

ரூ.200 கோடி வசூலை தொட்டதா தளபதி விஜய்யின் 'பீஸ்ட்? 

Friday, April 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான நிலையில் இந்த படத்தின் 9 நாட்கள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படம் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாயை கடந்தது என்றும், தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது என்றும் செய்திகள் வெளியானது

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி உலகம் முழுவதும் ‘பீஸ்ட்’ திரைப்படம் 9 நாட்களில் 210 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் 250 கோடி ரூபாய் என்ற மைல்கல்லை தொடும் என்றும் கூறப்படுகிறது

தமிழகத்தின் ரூபாய் 100 கோடி வசூல் செய்த ‘பீஸ்ட்’ படம் கேரளாவில் 10 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும், கேரளாவில் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த 9வது விஜய் படம் ‘பீஸ்ட்’ என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன

‘பீஸ்ட்’ படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் கூட குடும்ப ஆடியன்ஸ்களின் தொடர் வருகையால் ‘பீஸ்ட்’ படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos