close
Choose your channels

விஜய்யின் 'கோட்' திரைப்பட ரிலீஸ் தேதி இதுவா? நீண்ட விடுமுறை நாட்களா?

Saturday, March 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது கசிந்து இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கோட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் நிலையில் இதில் கலந்து கொண்டிருக்கும் விஜய் ஒவ்வொரு நாளும் ரசிகர்களை சந்தித்து வருகிறார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் திருவனந்தபுரம் படப்பிடிப்பை முடித்தவுடன் படக்குழுவினர் ரஷ்யா செல்ல இருப்பதாகவும் அத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைய இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அமெரிக்காவிலும் இந்தியாவிலும் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் அந்த பணிகளும் இன்னும் ஒரு சில வாரங்களில் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘கோட்’ திரைப்படம் விஜய்யின் பிறந்தநாளில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை என்ற நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை மற்றும் 26 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை என்பதால் இந்த விடுமுறை தினத்தை பயன்படுத்திக்கொள்ள பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

‘கோட்’ ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.