close
Choose your channels

'தளபதி 67' படம் ஒரு கேங்ஸ்டர் படமா? லோகேஷ் கனகராஜின் வீடியோ வைரல்

Sunday, June 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமலஹாசன் நடித்த ’விக்ரம்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் நடிக்கும் ’தளபதி 67’ படத்தை இயக்க இருக்கிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படம் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முன்னணி இயக்குனரகளுடன் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்ட கலந்துரையாடல் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் ஒரு கேங்ஸ்டர் படம் இயக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை என்றும், இதுவரை இல்லாத அளவில் கேங்ஸ்டர் கதையை புதுமையாக எப்படி செய்ய வேண்டும் என்று யோசித்து வருவதாகவும்,அந்த கதையை தான் தற்போது எழுதி வருவதாகவும், ஒரு வருடமாகியும் இன்னும் அந்த பணி முடியவில்லை என்றும் இந்த கதைக்காக பலரை சந்தித்து ஆய்வு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதில் இருந்து விஜய் நடிக்கும் ’தளபதி 67’ படத்திற்காகத்தான் இந்த கதையை அவர் எழுதியுள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ’தளபதி 67’ திரைப்படம் கேங்ஸ்டர் கதை என்றால் கேங்ஸ்டர் கேரக்டரில் விஜய் நடிக்கிறாரா? அல்லது கேங்ஸ்டர் கேரக்டரில் பிரபல நடிகரை நடிக்க வைத்துவிட்டு, அவரை பிடிக்கும் போலீஸ் கேரக்டரில் விஜய்யை லோகேஷ் நடிக்க வைக்க போகிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment