close
Choose your channels

விஜய்யின் அட்டகாசமான ஸ்டெப்ஸ், பூஜா ஹெக்டேவின் கிளாமர் டான்ஸ்: அரபிக்குத்து பாடல் ரிலீஸ்

Monday, February 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் அரபிக்குத்து பாடல் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது

சிவகார்த்திகேயன் பாடல் வரிகளில் அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி குரலில் உருவாகியுள்ள இந்தப் பாடலில் தளபதி விஜய்யின் வழக்கமான அட்டகாசமான ஸ்டெப்ஸ் உள்ள காட்சிகளும், பூஜாவின் கிளாமர் டான்ஸ் காட்சிகளும் உள்ளதை அடுத்து விஜய் ரசிகர்களுக்கு இந்த பாடல் காதலர் தின விருந்தாக அமைந்துள்ளது.

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்த திரைப்படத்தில் செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ்உள்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.