'தளபதி 66' படத்தின் இயக்குனர் இவர்களில் ஒருவரா?

  • IndiaGlitz, [Thursday,February 11 2021]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ’தளபதி 65’ திரைப்படத்தின் படப்பிடிப்பே இன்னும் தொடங்கவில்லை. ஆனால் அதற்குள் ’தளபதி 66’ திரைப்படத்தின் தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

’தளபதி 66’ திரைப்படத்தை ஏற்கனவே விஜய் நடித்த ’மெர்சல்’ படத்தை தயாரித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று தான் வெளிவரவேண்டும் என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் ’தளபதி 66’ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ், அட்லி, அஜய் ஞானமுத்து மற்றும் எச்.வினோத் ஆகிய நால்வரில் ஒருவர் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதில் லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லி ஆகிய இருவரும் ஏற்கனவே விஜய் நடித்த படங்களை இயக்கியவர்கள் என்பதும் ஒருவேளை அஜய் ஞானமுத்து அல்லது எச்.வினோத் இயக்கினால் முதன்முதலாக விஜய்யுடன் இணைய உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் ஸ்ரீதேனாண்டாள் தயாரிப்பில் உருவான ’மெர்சல்’ திரைப்படம் அதிக பட்ஜெட்டில் உருவானதை அடுத்து ’தளபதி 66’ திரைப்படம் மீடியம் பட்ஜெட்டில் உருவாகும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

More News

'சித்தி 2' தொடர் குறித்து அதிர்ச்சி முடிவெடுத்த ராதிகா: வைரல் டுவீட்

நடிகை ராதிகா தயாரித்து நடித்த 'சித்தி' சீரியல் கடந்த 1999ஆம் ஆண்டு மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 'சித்தி 2' சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பானது. 

சண்டையில கிழியாத சட்டையில்லை குமாரு: 'சுல்தான்' சிங்கிள் வைரல்!

பிரபல நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான 'சுல்தான்' திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிகையா? வைரல் வீடியோ!

பிரபல கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாகிய திரைப்படம் 'தி டர்ட்டி பிக்சர்ஸ்'. பாலிவுட் நடிகை வித்யாபாலன் நடித்து இருந்த

ஷகிலா மடியில் குறட்டை விட்டு தூங்கிய மணிமேகலை: வைரல் வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக புகழ் மற்றும் ஷிவாங்கியின் அண்ணன் தங்கை காமெடிகள்

நாளை ரிலீஸாகவுள்ள நிலையில் 'ஏலே' படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு!

இயக்குனர் ஹலிதா சமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவான 'ஏலே' திரைப்படம் நாளை திரையரங்குகளில் ரிலீசாக இருந்தது. இந்த நிலையில் இந்த படம் வரும் 28ஆம் தேதி