close
Choose your channels

ஷகிலா மடியில் குறட்டை விட்டு தூங்கிய மணிமேகலை: வைரல் வீடியோ

Thursday, February 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக புகழ் மற்றும் ஷிவாங்கியின் அண்ணன் தங்கை காமெடிகள், ஷிவாங்கி-அஸ்வினின் ரொமான்ஸ் காமெடிகள், பவித்ராவிடம் புகழ் செய்யும் ரொமான்ஸ் சேட்டைகள், ஷகிலாவின் கறார் காட்சிகள் உள்ளிட்டவை நிகழ்ச்சியின் சுவாரசியத்தை அதிகரித்து வருகிறது

மேலும் பாலா,சரத், மதுரை முத்து ஆகியோர்களின் காமெடி காட்சிகள் பாபா மாஸ்டரின் அட்ராசிட்டி ஆகியவையும் பார்வையாளர்களை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது நிகழ்ச்சியில் இடம் பெறாத சில காட்சிகளின் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

அதில் ஷகிலாவின் மடியில் படுத்து குறட்டை விட்டு தூங்கும் மணிமேகலையின் காட்சியும் மாடர்ன் டிரஸ் போட்டு ஷிவாங்கி அசத்தலாக நடந்து வரும் காட்சியும் உள்ளது. அதேபோல் அஸ்வின் சரத் ஆகியோர் நடனமாடும் காட்சிகளின் வீடியோவும் அசத்தலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.