close
Choose your channels

நீண்ட இடைவெளிக்கு பின் ரீஎண்ட்ரி ஆன 'தாமிரபரணி' நாயகி.. மீண்டும் ஒரு ரவுண்டு வருவாரா?

Wednesday, February 21, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ஹரி இயக்கத்தில், விஷால் நடித்த ‘தாமிரபரணி’ என்ற திரைப்படம் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அந்த படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான நடிகை பானு நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது மீண்டும் ரீ என்ட்ரி ஆகியுள்ள நிலையில் அவர் நடித்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

‘தாமிரபரணி’ படத்தின் வெற்றிக்கு பிறகு ’ரசிகர் மன்றம்’ ’அழகர் மலை’ ’சட்டப்படி குற்றம்’ ’பொன்னர் சங்கர்’ உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் பல மலையாள படங்களிலும் நடித்த பானு கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

இந்த நிலையில் ஒரு பெண் குழந்தைக்கு தாயான பானு நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் ’குருவி பாப்பா’ என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆகியுள்ளார். ’காதல் தேசம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த வினித் கதாநாயகன் நடித்துள்ள இந்த படத்தில் டீன் ஏஜ் பெண்ணுக்கு தாயாக பானு நடித்துள்ளதாக சமீபத்தில் வெளியான ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.

இந்த படம் வெற்றி பெற்றால் மீண்டும் திரையில் பானு ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment