close
Choose your channels

'மாஸ்டர்' - 'தளபதி 67' படங்களில் உள்ள முக்கிய வித்தியாசம்: லோகேஷ் கனகராஜ்

Wednesday, December 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக இணைந்த ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இரண்டாவது முறையாக விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் இணைந்த ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’மாஸ்டர்’ திரைப்படம் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரது பாணியில் 50 - 50 சதவீதம் உள்ள படமாக இருந்தது என்று ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் பல பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் ’தளபதி 67’ திரைப்படம் முழுக்க முழுக்க தன்னுடைய பாணியில் உருவாகும் படம் என்றும், இதுதான் இரு படங்களுக்கும் இடையிலான மிகப்பெரிய வித்தியாசம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் கவுதம் மேனன் நடிக்க இருப்பதை முதன் முதலாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் வில்லன்களாக சஞ்சய்தத், அர்ஜுன், கவுதம் மேனன், நிவின் பாலி ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது கவுதம் மேனன் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றவர்களையும் விரைவில் அவர் உறுதி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

த்ரிஷா நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.