'தளபதி 66' படத்தில் இணைந்த பிரபல நடிகர்: நாயகி ராஷ்மிகா அப்பா கேரக்டரா?

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 66’ திரைப்படத்தில் ஏற்கனவே சரத்குமார், ஷாம், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிக்க இருப்பது உறுதி செய்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் வம்சி இயக்கத்தில், தில்ராஜூ தயாரிப்பில், தமன் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 66’. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்யின் தந்தையாக சரத்குமார், சகோதரராக ஷாம், ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இளையதிலகம் பிரபு இந்த படத்தில் இணைந்து உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இவர் அனேகமாக நாயகி ராஷ்மிகா மந்தனாவின் அப்பா கேரக்டரில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் பிரபு இந்த படத்தில் இணைந்து இருப்பதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. நடிகர் பிரபு ஏற்கனவே விஜய்யுடன் ’புலி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அவர்களை இங்கிருந்து விரட்டியடிக்க ஒரே வழி இதுதான்: இயக்குனர் தங்கர்பச்சான் ஆவேசம்!

 ஹிந்தி மொழியை தமிழகத்தில் திணிப்பவர்களை விரட்டியடிக்க ஒரே வழி இதுதான் என இயக்குனர் தங்கர்பச்சான் தனது சமூக வலைத்தளத்தில் ஆவேசமாக பதிவு செய்துள்ளார் 

சரியாக ரீமேக் செய்யப்பட்ட படம் 'மெர்சல்' தான்: அட்லியை கலாய்த்த பிரபல இயக்குனர்

சரியாக ரீமேக் செய்யப்பட்ட தமிழ் படம் எது என்ற ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த பிரபல இயக்குனர் அட்லீயின் 'மெர்சல்' என்று பதில் அளித்து இருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை

'குக் வித் கோமாளி' சீசன் 3 பிரபலத்தின் வளைகாப்பு புகைப்படம்: இணையத்தில் வைரல்!

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவரின் வளைகாப்பு புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் சேர்ந்து முத்தம் கொடுத்தது யாருக்கு தெரியுமா? வைரல் வீடியோ!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலர்கள் என்பதால் ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்துக் கொள்வது சகஜம் தான்.

நயன்தாராவின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல நடிகை!

நயன்தாரா நடித்து வரும் அடுத்த திரைப்படத்தில் இணைந்து உள்ளதாக பிரபல நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்