'வியூகம்', 'சபதம்': இரண்டு பாகங்களின் டைட்டிலை அறிவித்த பிரபல இயக்குனர்!

பிரபல இயக்குனர் தனது அடுத்த படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட இருப்பதாகவும் அந்த படங்களின் டைட்டில் ’வியூகம்’ மற்றும் ‘சபதம்’ என தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகில் பிரபலமாக இருந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் ராம்கோபால் வர்மா. இவர் ஏற்கனவே ஒரு சில படங்களை இயக்கவிருப்பதாக அறிவித்திருந்த போதிலும் அந்த படங்களின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. இந்த நிலையில் தற்போது அவர் இரண்டு பாகங்களின் படத்தை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

இந்த படத்தின் முதல் பாகத்தின் டைட்டில் ’வியூகம்’ என்றும் இரண்டாம் பாகத்தின் டைட்டில் ‘சபதம்’ என்றும் அறிவித்துள்ளார். இரண்டுமே அரசியல் சம்பந்தப்பட்ட படம் என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்த படம் எந்த ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாறு படம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். வாழ்க்கை வரலாறு படம் என்றால் அதில் பொய்களைக் கலந்து சொல்ல வேண்டிய நிலை வரும் என்றும் ஆனால் இதில் 100 சதவீத உண்மை சம்பவங்களை கூற இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதல் பாகம் ரசிகர்களுக்கு ஷாக் என்றால், இரண்டாம் பாகம் எலக்ட்ரிக் ஷாக் ஆக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக இயக்குனர் ராம் கோபால் வர்மா சமீபத்தில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்தார். முதல்வரை சந்தித்த சில நாட்களில் அவர் இந்த அரசியல் படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

நான் வீட்டை விட்டு ஓடிப்போகப்போறேன், எல்லாரும் வழியனுப்பி விடுங்க.. 'நித்தம் ஒரு வானம்' டிரைலர்

நடிகர் அசோக்செல்வன் நடித்த 'நித்தம் ஒரு வானம்' என்ற படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

16 வயது சிறுமி பாலியல் வழக்கில் பாய்ந்த போக்சோ சட்டம்: ஷங்கர் மருமகன் எடுத்த அதிரடி முடிவு!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மருமகன் மீது 16 வயது சிறுமி கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு காரணமாக அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்ததால் அவர் தற்போது அதிரடி முடிவு எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். 

'இதை சொன்ன புறம்போக்கு மட்டும் என் கையில கிடைச்சான்.... 'நான் மிருகமாய் மாற' டிரைலர்

சசிகுமார் நடித்த 'நான் மிருகமாய் மாற' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த மாதம் அதாவது நவம்பர் மாதம்

ரூ.100 கோடி படமா இருந்தாலும் நல்லா இல்லைன்னா, நல்லா இல்லைன்னு சொல்லுங்க: கமல்ஹாசன்

ஒரு திரைப்படம் 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு இருந்தாலும் அந்த படம் நன்றாக இல்லை என்றால் நன்றாக இல்லை என்று தைரியமாக விமர்சனம் செய்யுங்கள் என்று உலக நாயகன் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

திருமணமாகாத இரண்டு தமிழ் நடிகைகள் கர்ப்பம்? இன்ஸ்டாகிராம் போஸ்ட்டால் பரபரப்பு!

திருமணமாகாத 2 தமிழ் நடிகைகள் தாங்கள் கர்ப்பம் என இன்ஸ்டாகிராமில் போஸ்ட் பதிவு செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.