close
Choose your channels

நான் வீட்டை விட்டு ஓடிப்போகப்போறேன், எல்லாரும் வழியனுப்பி விடுங்க.. 'நித்தம் ஒரு வானம்' டிரைலர்

Saturday, October 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அசோக்செல்வன் நடித்த ’நித்தம் ஒரு வானம்’ என்ற படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவரான அசோக் செல்வன் நடித்துள்ள திரைப்படம் ’நித்தம் ஒரு வானம்’. இந்த படத்தில் நாயகிகளாக ரிது வர்மா மற்றும் அபர்ணா பாலமுரளி நடித்துள்ள நிலையில் இந்த படத்தை கார்த்திக் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி உள்ளார்.

ரொமான்ஸ் மற்றும் காமெடி படமான இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது நவம்பர் 4ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளிவந்துள்ள நிலையில் இந்த ட்ரெய்லர் வீடியோ வைரலாகி வருகிறது.

இதில் அசோக் செல்வனை விரட்டி விரட்டி காதலிக்கும் அபர்ணா பாலமுரளி மற்றும் ரிதுவர்மாவை காதலிக்கும் அசோக் செல்வன் ஒரு முக்கோண காதல் கதை போல் இந்த ட்ரைலரில் இருந்து தெரியவருகிறது.

கோபி சுந்தர் இசையில், விது அய்யண்ணா ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் அசோக் செல்வனுக்கு மேலும் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் டிரைலரை நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டு படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.