close
Choose your channels

'தளபதி 67' படத்தில் நடிப்பதை மறைமுகமாக உறுதி செய்த பிரபல நடிகர்: இன்னும் எத்தனை பேர்?

Thursday, November 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்திருக்கும் ’வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படமான ’தளபதி 67’ படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ‘விக்ரம்’ என்ற மாபெரும் வெற்றி படத்தை அடுத்து இயக்கியிருக்கும் படம் என்பதாலும் ’மாஸ்டர்’ படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் அவர் இணைய இருப்பதாலும் இந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’தளபதி 67’ படத்தில் ஏற்கனவே பிரபல மலையாள நடிகர்கள் நடிகர் பிருத்விராஜ், நிவின் பாலி ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது மற்றொரு மலையாள நடிகரான உன்னி முகுந்தன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ’மாஸ்டர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போலவே செல்பி ஒன்றை எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து ’தளபதி 67’ படத்தில் நடிப்பதை மறைமுகமாக உறுதி செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த படத்தில் விஷால், சஞ்சய்தத், அர்ஜுன், மிஷ்கின், கவுதம் மேனன் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இன்னும் எத்தனை பிரபலங்கள் இந்த படத்தில் இணைவார்கள்? என்ற கேள்வியை ஆச்சரியமாக ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

நடிகர் உன்னி முகுந்தன் சமந்தாவுடன் நடித்த ’யசோதா’ திரைப்படம் நவம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment