அஜித்தை நேரில் பார்த்த மதுரை ரசிகர்களின் நெகிழ்ச்சியான பதிவு

  • IndiaGlitz, [Saturday,May 12 2018]

தல அஜித் நடித்து வரும் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் அவரை நேரில் பார்க்க தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தினந்தோற்றும் நூற்றுக்கணக்கானோர் ஐதரபாத் சென்று வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் மதுரை சேர்ந்த அஜித் ரசிகர்கள் அஜித்தை பார்க்க நேற்று ஐதராபாத் சென்றுள்ளனர். அவர்கள் அஜித்தை நேரில் பார்த்த மகிழ்ச்சியான தருணத்தை தங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர். அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

அஜித்தின் நல்ல குணங்களை இதுவரை நாங்கள் கேள்விப்பட்டிருக்கின்றோம். இன்று நாங்கள் நேரில் பார்த்தோம். எங்களை பார்த்ததும் அவரே நாங்கள் உட்கார சேரை எடுத்து போட்டது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. பின்னார் நாங்கள் மதுரையில் இருந்து வருகிறோம் என்று சொன்னதும் என்னை பார்க்க ஏன் அவ்வளவு தூரத்தில் இருந்து வருகிறீர்கள். இனிமேல் இதுபோன்ற தவறை செய்ய கூடாது என்று அக்கறையுடன் கூறியபோது அவரது அன்பு வெளிப்பட்டது.

அதேபோல் அஜித்துடன் நாங்கள் சிறுசிறு குழுவாக புகைப்படம் எடுத்து கொண்டிருந்தோம். அப்போது என் நண்பர் ஒருவரை பார்த்து அஜித்தின் பாதுகாவலர், 'தம்பி நீ எல்லா போட்டோக்களிலும் இருக்கின்றாய் என்று கையை நீட்டி கூறினார். உடனே அந்த பாதுகாவலரை கடிந்து கொண்ட அஜித், 'உங்களுக்கு யாரையும் கையை நீட்டி பேச அதிகாரமில்லை என்று கூறியது எங்களுக்கெல்லாம் வியப்பின் உச்சமாக இருந்தது

கடைசியாக வாசல் வரை அஜித் எங்களுடன் வந்து வழியனுப்பி வைத்தார். மனமகிழ்வுடன் வீடு திரும்பினோம்' என்று அந்த ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்துள்ளனர்.

More News

நேற்றைய ரிலீஸ் படங்களின் முதல் நாள் வசூல் விபரம்

ஒவ்வொரு வாரமும் தயாரிப்பாளர் சங்கத்தின் திரைப்பட வெளியீட்டு குழுவின் பரிந்துரையின்படி மூன்று திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில்

பிரபல நடிகையை 2வது திருமணம் செய்த கமல் பட இசையமைப்பாளர்

கமல்ஹாசன் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய 'தசாவதாரம்' படத்திற்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மியா, தொலைக்காட்சி நடிகை சோனியா கபூரை நேற்றிரவு திடீரென திருமணம் செய்து கொண்டார்.

கமல்ஹாசனின் 'பிக்பாஸ் 2' டீசர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு

கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான 'பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

திருமணத்திற்கு பின் சமந்தாவின் ஹாட்ரிக் வெற்றி

பொதுவாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தாலும் திருமணத்திற்கு பின்னர் வாய்ப்பு குறைந்துவிடும். அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும் அந்த படங்கள் ஹிட்டாகுவது அரிதாகவே இருந்து வந்துள்ளது.

ரஜினியுடன் கூட்டணி வைத்தால் நாசமாகிவிடும்: சுப்பிரமணியன் சுவாமி

பாஜக மேலிடம் இன்று வரை ரஜினியுடன் கூட்டணி வைப்பதையே விரும்புவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகிய சுப்பிரமணியன் சுவாமி ஆரம்பம்