ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் முதல் இந்திய திரைப்படம்.. நடிகை மீனாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
நடிகை மீனா நடித்த திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட இருக்கும் நிலையில் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதையடுத்து மீனாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
கடந்த 2013 ஆம் ஆண்டு மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’த்ரிஷ்யம்’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் வெறும் 5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.72 கோடி வரை வசூல் செய்து மலையாள திரையுலகையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளிலும் சிங்களம், சீனா, இந்தோனேசியா மற்றும் கொரியன் ஆகிய வெளிநாட்டு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படம் முதல் முறையாக ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்ஃப் ஸ்ட்ரீம் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் ஹாலிவுட்டில் ’த்ரிஷ்யம்’ படத்தை ரீமேக் செய்ய இருப்பதாகவும் இதன் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் சூப்பர் ஹிட் ஆன இந்த படம் ஹாலிவுட்டிலும் மிகப் பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
![](https://1571723588.rsc.cdn77.org/anomusercomment.jpg)