close
Choose your channels

அமெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை: புகைப்படம் வைரல்

Tuesday, March 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமெரிக்க இராணுவத்தில் இணைந்துள்ள முதல் தமிழ் நடிகை என்ற பெருமை பெற்றுள்ள நடிகைக்கு வாழ்த்துக்கள் குவித்து வருகிறது.

சமீபத்தில் வெளியான ’காதம்பரி’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர் நடிகை அகிலா நாராயணன். ’காதம்பரி’ படத்தை இயக்கிய அருள் இந்த படத்தில் நாயகனாகவும் காசிம் ரஃபி என்பவர் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் அகிலா நாராயணன் என்ற அமெரிக்கா வாழ் தமிழ்ப்பெண் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் அமெரிக்க வாழ் தமிழ் பெண்ணான அகிலா நாராயணன் தற்போது அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞராக இணைந்துள்ளார். இது குறித்த புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது

அமெரிக்க இராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை பெற்ற அகிலா நாராயணனுக்கு தமிழ் திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.