close
Choose your channels

'கோட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளின் புரமோ வீடியோ.. பாடகர் குறித்த மாஸ் தகவல்..!

Saturday, April 13, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாக இருப்பதாக சில மணி நேரங்களுக்கு முன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த பாடலை பாடியவர் யார் என்பது குறித்த மாஸ் தகவல் குறித்த வீடியோ வெளியாகி அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’கோட்’. ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் நாளை தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சற்று முன் வெளியாகிய புரமோ வீடியோவில் இந்த பாடலை பாடுவது விஜய் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் பாடிய பாடல் வெளியாக உள்ளதை அடுத்து இந்த பாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த பாடலை மதன் கார்க்கி எழுதி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வெளியாகும் இந்த பாடல் நிச்சயம் விஜய்யின் மற்ற பாடல்கள் போலவே சூப்பர் ஹிட் ஆகும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இருக்காது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.