close
Choose your channels

'விக்ரம்' படத்தின் இரண்டு கேரக்டர்கள் 'லியோ'வில்? LCU உறுதியா?

Wednesday, August 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’விக்ரம்’ படத்தில் இடம்பெற்ற இரண்டு முக்கிய கேரக்டர்கள் ’லியோ’ படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் எனவே ’லியோ’ திரைப்படம் LCU படம் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

’விக்ரம்’ திரைப்படத்தில் கடைசி ஐந்து நிமிடங்களில் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் கலக்கும் என்பதும் இந்த கேரக்டரை வைத்து தனியாகவே ஒரு திரைப்படம் எடுக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ’லியோ’ திரைப்படத்தில் விஜய்யுடன் ரோலக்ஸ் கேரக்டர் செல்போனில் பேசுவது போன்ற ஒரு காட்சி இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது ’விக்ரம்’ படத்தில் இடம்பெற்ற பகத் பாசிலின் அமர் கேரக்டரும் ’லியோ’ படத்தில் ஒரு சில காட்சிகளில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் மட்டும் உண்மையாக இருந்தால் ’லியோ’ படம் LCU படம் என்பது உறுதி செய்யப்படுவது மட்டுமின்றி வேற லெவல் எதிர்பார்ப்புகள் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos