close
Choose your channels

வீரம், வேதாளம், விஸ்வாசம் படங்களுக்கான அபூர்வ ஒற்றுமைகள்

Friday, December 28, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் அஜித்தின் முந்தைய படங்களான 'வீரம்' மற்றும் 'வேதாளம்' ஆகிய படங்களும் தற்போது ரிலீஸ் ஆகும் 'விஸ்வாசம்' படங்களுக்கும் இடையே சில அபூர்வ ஒற்றுமைகள் உள்ளன.

'வீரம்' திரைப்படம் 2014ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதியும், 'வேதாளம்' திரைப்படம் 2015ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதியும் ரிலீஸான நிலையில், 'விஸ்வாசம்' திரைப்படம் 2019ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. ஆக மூன்று படங்களுமே 10ஆம் தேதி ரிலீஸ் என்பது ஒரு அபூர்வ ஒற்றுமை.

அதேபோல் மூன்று படங்களுமே சோலோவாக ரிலீஸ் ஆகாமல் மற்றொரு பெரிய நடிகரின் படங்களுக்கு போட்டியாக வெளியாகிறது. 'வீரம்'; படத்துடன் விஜய்யின் 'ஜில்லா'வும், 'வேதாளம்' படத்துடன் கமல்ஹாசனின் 'தூங்காவனம்' படமும் ரிலீஸான நிலையில், 'விஸ்வாசம்' படத்துடன் ரஜினியின் 'பேட்ட' படம் ரிலீஸ் ஆகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.