தமிழிசையின் 'மெர்சல்' ஜிஎஸ்டி கருத்துக்கு திருமாவளவன் பதில்

  • IndiaGlitz, [Thursday,October 19 2017]

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தின் கடைசி காட்சியில் இடம்பெற்ற ஜிஎஸ்டி வசனம் மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்த வசனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், இந்த வசனங்கள் நீக்கப்படாவிட்டால் வழக்கு தொடரவுள்ளதாகவும் எச்சரித்தார். சென்சார் போர்டு அனுமதித்த ஒரு வசனத்தை ஒரு கட்சியின் தலைவர் நீக்க சொல்வது சரியா? என்பது குறித்த செய்தியை சற்றுமுன்னர் நாம் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் 'மெர்சல்' படக்குழுவினர்களுக்கு தமிழிசை செளந்திரராஜன் விடுத்த எச்சரிக்கைக்கு இதுவரை 'மெர்சல்' குழுவினர் பதில் அளிக்காத நிலையில் இதற்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியபோது, 'மெர்சல்' பட விவகாரத்தில் படத்திற்கு சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழுவைத்தான் தமிழிசை குற்றம்சாட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் நடிகர்கள் அரசியலுக்கு வருவதை குறை கூற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More News

கபாலியை முந்திய 'மெர்சல்' முதல் நாள் வசூல்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் நேற்று வெளியாகி பெருவாரியான பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று நல்ல வசூலை அள்ளியது

நிலவேம்பு கசாயம் சர்ச்சை: கமல்ஹாசனுக்கு சித்த மருத்துவர்கள் சங்கம் கண்டனம்

கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு பொதுமக்களின் அமோக ஆதரவை பெற்ற நிலையில் முதன்முதலாக அவருடைய டுவீட் ஒன்றுக்கு பொதுமக்கள் தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

நிலவேம்பு டுவீட்: கமல் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் 

டெங்கு காய்ச்சலுக்காக விநியோகம் செய்துவரும் நிலவேம்பு குடிநீர் குறித்து கமல் நேற்று தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்த டுவிட்டுக்களுக்கு ஏற்கனவே பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும்

தளபதியின் மெர்சலுக்கு பிரபலங்களின் பாராட்டு

தளபதி விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் பெரும் வரவேற்பையும் வசூல்களையும் பெற்று வருகிறது.

'மெர்சல்' படத்தில் ஜிஎஸ்டி காட்சியை நீக்க வேண்டும்: தமிழிசை 

விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் வழக்கம்போல் இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.