close
Choose your channels

இந்த வார ஓடிடி ரிலீஸ் விவரங்கள்.. எத்தனை தமிழ் திரைப்படங்கள்?

Thursday, January 4, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் நான்கு அல்லது ஐந்து திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் அதே அளவு ஓடிடியிலும் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியான படங்கள் ரிலீஸ் ஆகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இந்த வாரம் இரண்டு தமிழ் படங்கள் உள்பட மற்ற மொழி படங்களும் ரிலீஸ் ஆகின்றன. நடிகர் சதீஷ் நடித்த ’கான்ஜூரிங் கண்ணப்பன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இந்த வாரம் வெளியாக இருக்கிறது. திரையரங்குகளில் இந்த படத்தை பார்க்காதவர்கள் ஓடிடியில் பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதேபோல் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான ’லில்லி ராணி’ என்ற திரைப்படம் இந்த வாரம் ஆகா ஓடிடியில் ரிலீஸ் ஆகிவுள்ளது. சாயாசிங், தம்பி ராமையா, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை விஷ்ணு ராமகிருஷ்ணன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு தமிழ் படங்கள் போக நானி, மிருணாள் தாக்கூர் நடித்த ‘ஹாய் நானா’ என்ற தெலுங்கு திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில், ‘காலிங் சாஹஸ்ரா’ என்ற தெலுங்கு திரைப்படம் ப்ரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

மேலும் ‘உடல்’ என்ற மலையாள படம் சைனா பிளே ஓடிடியில், ’பெரிலூர் பிரிமியர்’ லீக்’ என்ற மலையாள திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment