close
Choose your channels

தளபதி விஜய்யின் 'GOAT' படத்தில் 'என்னை அறிந்தால்' நடிகை.. என்ன கேரக்டர்?

Thursday, January 4, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் நடித்த நடிகை தளபதி விஜய் நடித்து வரும் ‘GOAT’ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதை அடுத்து இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

ஏற்கனவே ‘GOAT’ படத்தில் சினேகா, லைலா, மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகிய மூன்று நாயகிகள் நடித்து வருவதாக தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி சமீபத்தில் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் இணைந்தார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி ’என்னை அறிந்தால்’ உள்பட ஒரு சில படங்களில் பார்வதி நாயர் ‘GOAT’ படத்தில் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு இந்த படத்தில் ஒரு வலிமையான கேரக்டர் என்றும் இதுவரை தான் நடிக்காத கேரக்டரை தனக்கு வெங்கட் பிரபு கொடுத்திருப்பதாகவும் பார்வதி நாயக் கூறியுள்ளார்.

அடுத்தடுத்து ‘GOAT’ படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் படத்தின் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருகின்றனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.