close
Choose your channels

இந்த வாரம் ஒரே ஒரு படம்  தான்: ஓடிடி ரிலீஸ் குறித்து ஒரு பார்வை!

Tuesday, January 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் 4 முதல் 5 திரைப்படங்கள் வரை ரிலீசாகி வரும் நிலையில் அதற்கு இணையாக ஓடிடியிலும் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் ஒரே ஒரு தமிழ் படம் மட்டுமே ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமுத்திரக்கனி நடிப்பில் பிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவான ’ரைட்டர்’ என்ற திரைப்படம் இந்த வாரம் ஜனவரி 28ஆம் தேதி ’ஆஹா தமிழ்’ ஓடிடி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது. சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீஸாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவதால் மேலும் அதிகமான ரசிகர்களை இந்த படம் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மோகன்லால், மீனா மற்றும் பிரித்விராஜின் ‘புரோ டாடி’ என்ற திரைப்படம் ஹாட்ஸ்டாரில் இன்று ஒளிபரப்பாகிறது. அதேபோல் ‘தடப்’ என்ற இந்தி திரைப்படமும் ஹாட்ஸ்டாரில் இன்று முதல் வெளியாகிறது.

மேலும் ரஜிஷா விஜயன் நடித்த ‘எல்லாம் சரியாகும்’ என்ற மலையாளத் திரைப்படம் ஜி5 சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது. அதேபோல் ‘படவா ராஸ்கல்’ என்ற கன்னட திரைப்படமும், ‘ஹோம் டீம்’ என்ற ஆங்கில திரைப்படமும், அர்ஜுனா பால்குணா என்ற தெலுங்கு திரைப்படமும் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.