நேற்றைய ரிலீஸ் படங்களின் முதல் நாள் வசூல் விபரம்

  • IndiaGlitz, [Saturday,May 12 2018]

ஒவ்வொரு வாரமும் தயாரிப்பாளர் சங்கத்தின் திரைப்பட வெளியீட்டு குழுவின் பரிந்துரையின்படி மூன்று திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் நேற்று விஷால், சமந்தா நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கிய 'இரும்புத்திரை', கீர்த்திசுரேஷ், துல்கர் சல்மான் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கிய 'நடிகையர் திலகம் மற்றும் அருள்நிதி நடித்த 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' ஆகிய படங்கள் வெளியானது

இந்த நிலையில் இந்த மூன்று திரைப்படங்களின் முதல் நாள் சென்னை வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இதன்படி விஷாலின் இரும்புத்திரை சென்னையில் ரூ.38 லட்சமும், அருள்நிதியின் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' திரைப்படம் ரூ.19 லட்சமும், கீர்த்திசுரேஷின் நடிகையர் திலகம் ரூ.18 லட்சமும் வசூல் செய்துள்ளது.

இந்த வாரம் வெளியான மூன்று படங்களுக்கும் ஊடகங்களில் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளதாலும் இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதாலும் இந்த இரண்டு நாட்களில் இந்த படம் நல்ல வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

பிரபல நடிகையை 2வது திருமணம் செய்த கமல் பட இசையமைப்பாளர்

கமல்ஹாசன் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய 'தசாவதாரம்' படத்திற்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மியா, தொலைக்காட்சி நடிகை சோனியா கபூரை நேற்றிரவு திடீரென திருமணம் செய்து கொண்டார்.

கமல்ஹாசனின் 'பிக்பாஸ் 2' டீசர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு

கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான 'பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

திருமணத்திற்கு பின் சமந்தாவின் ஹாட்ரிக் வெற்றி

பொதுவாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தாலும் திருமணத்திற்கு பின்னர் வாய்ப்பு குறைந்துவிடும். அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும் அந்த படங்கள் ஹிட்டாகுவது அரிதாகவே இருந்து வந்துள்ளது.

ரஜினியுடன் கூட்டணி வைத்தால் நாசமாகிவிடும்: சுப்பிரமணியன் சுவாமி

பாஜக மேலிடம் இன்று வரை ரஜினியுடன் கூட்டணி வைப்பதையே விரும்புவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகிய சுப்பிரமணியன் சுவாமி ஆரம்பம்

கமலுக்கு சாவித்திரியின் பாராட்டும், சாவித்திரிக்கு கமலின் பாராட்டும்

உலகநாயகன் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக சாவித்திரி நடித்த 'களத்தூர் கண்ணம்மா' என்ற படத்தில் அறிமுகமானார் என்பதும், முதல் படத்திலேயே சிறப்பாக நடித்ததற்காக