close
Choose your channels

'வாரிசு' படத்தின் வசூல் வடைகள்.. கேலி செய்த 'துணிவு' தயாரிப்பாளர்

Thursday, January 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ படத்தின் வசூல் தகவல்கள் இணையதளங்களில் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த தகவல்கள் போலியானவை என்பதை குறிக்கும் வகையில் ’துணிவு’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ராகுல், ‘ நிலாவில் வடை சுடும் புகைப்படத்தை பதிவு செய்து கேலி செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் நடித்த ’வாரிசு’ மற்றும் அஜித் நடித்த ’துணிவு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் விருந்தாக வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் வசூல் குறித்த தகவல்களை நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் ’வாரிசு’ படத்தின் தமிழக ரிலீஸ் ஒருமை பெற்ற 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் ஏழு நாட்களில் இந்த படம் ரூ.210 கோடி வசூல் செய்துள்ளதாகவும் உண்மையான பொங்கல் வின்னர் என்றும் அறிவித்திருந்தது.

இதனை கேலி செய்யும் வகையில் ’துணிவு’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் நிலாவில் பறவை முனியம்மா பாட்டி வடை சுடும் புகைப்படத்தை பதிவு செய்து ’வாரிசு’ படத்தின் வசூல் தகவல்கள் போலி என மறைமுகமாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து வழக்கம் போல் அஜித், விஜய் ரசிகர்கள் கருத்து முதலில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு திரைப்படத்தின் உண்மையான வசூல் என்பது விநியோகிஸ்தர் மற்றும் தயாரிப்பாளருக்கு மட்டுமே தெரியும் என்ற நிலையில் டிராக்கர்கள் தங்கள் இஷ்டத்துக்கு ’வாரிசு’ 'துணிவு’ படங்களின் வசூல் விவரங்களை இணையதளங்களில் பதிவு செய்து வருவதற்கு முடிவு கட்ட வேண்டும் என்பதே நடுநிலை ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos