பரபரப்பை ஏற்படுத்திய சேகர் ரெட்டியின் டைரி;

  • IndiaGlitz, [Friday,December 08 2017]

கடந்த ஆண்டு பிரதமர் மோடி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தபோது பொதுமக்கள் பலர் ஒரே ஒரு ரூ.2000 நோட்டுக்காக பலமணி நேரம் வரிசையில் காத்திருந்தனர். ஆனால் கோடிக்கணக்கில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை சேகர் ரெட்டி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது. 

சேகர் ரெட்டிக்கு அப்போதைய முதல்வரும் இப்போதைய துணை முதல்வருமான ஓபிஎஸ் நெருக்கமானவர் என்று கூறப்பட்டது. ஆனால் இதை ஓபிஎஸ் மறுத்தார்.


இந்த நிலையில் பிரபல ஆங்கில சேனலான ‘டைம்ஸ் நவ்’ சேனல் சேகர் ரெட்டியின் டைரியை இன்று வெளியிட்டு அதில் ஐந்து முக்கிய அமைச்சர்களுக்கு பணம் கொடுத்ததாக உள்ள விபரங்களையும் குறிப்பிட்டுள்ளது. இதனால் சேகர் ரெட்டியுடன் தமிழக அமைச்சர்கள் பலருக்கும் தொடர்பு உள்ளது என்பது அம்பலமாகியுள்ளது. மேலும் இந்த டைரியில் ஒருசில பத்திரிகை ஆசிரியர்களுக்கும் பணம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

ஐடி வேலைக்கு பதில் ஆன்லைனில் கீரை விற்பனை: கோவை இளைஞரின் சாதனை

ஐடி அலுவலகத்தில் பணிபுரிந்த கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஐடி பணியை உதறிவிட்டு ஆன்லைனில் கீரை விற்பனையில் சாதனை புரிந்து வருகிறார்

அரை வேக்காட்டு நபர்களின் வசூல் விபரங்கள்: எஸ்.ஆர்.பிரபு ஆவேசம்

கோலிவுட் திரையுலகில் வெள்ளிக்கிழமை ஒரு படம் ரிலீஸ் ஆனால் சனிக்கிழமையே அந்த படத்தின் வசூல் குறித்த தகவல்களை சில டுவிட்டர் பயனாளிகள் பதிவு செய்து வருகின்றனர்

அரை மணி நேரத்தில் போஸ்டரை தயார் செய்த தல ரசிகர்

தல அஜித் நடிக்கும் அடுத்த படமான 'விசுவாசம்' படத்தில் அவர் கருப்பு நிற ஹேர் ஸ்டைலில் தோன்ற போகிறார் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பது தெரிந்ததே.

துரோகிகளுக்கு பிரஷர் கொடுக்கவே குக்கர் சின்னம்: தினகரன்

தினகரனுக்கு நேற்று தேர்தல் ஆணையம் குக்கர் சின்னம் வழங்கியது. இந்த சின்னத்தை தேர்வு செய்தது ஏன் என்று கூறிய தினகரன், 'துரோகிகளுக்கு பிரஷர் ஏற்றவே ‘பிரஷர் குக்கர்’ சின்னத்தை தேர்வு செய்தோம்

சூப்பர் ஹிட் வெற்றிப்படத்தின் ரீமேக்கில் நயன்தாரா

கடந்த ஆண்டு கன்னட மொழியில் வெளியான 'யூடர்ன்' திரைப்படம் குறித்து அனைவரும் அறிந்ததே. லூசியா படத்தின் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்த  இயக்குநர் பவன்குமார்