close
Choose your channels

சூப்பர் ஹிட் வெற்றிப்படத்தின் ரீமேக்கில் நயன்தாரா

Friday, December 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு கன்னட மொழியில் வெளியான 'யூடர்ன்' திரைப்படம் குறித்து அனைவரும் அறிந்ததே. லூசியா படத்தின் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்த  இயக்குநர் பவன்குமார் இயக்கிய இந்தப்படம் மர்மமான, க்ரைம் த்ரில்லர் படம். கதாநாயகிக்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் ஷாரதா ஸ்ரீநாத் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகவுள்ளது. ஷாரதா ஸ்ரீநாத் நடித்த கேரக்டரில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'சைத்தான்' மற்றும் இன்று வெளியாகும் 'சத்யா' படங்களை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இந்த படத்தை இயக்கவுள்ளார்

மலேசியா பின்னணியில் உருவாகவுள்ள இந்த படத்தில் நயன்தாரா பத்திரிகையாளராக நடிக்கவுள்ளார். சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன அறம் படத்தில் கலெக்டராக நடித்து அனைவரையும் கவர்ந்த நயன்தாரா பத்திரிகையாளர் வேடத்திலும் தனது முழு திறமையை வெளிப்படுத்தி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.