மாரி 2: முக்கிய பணியை முடித்த வில்லன் டொவினோ தாமஸ்

  • IndiaGlitz, [Wednesday,October 31 2018]

தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த சில மாதங்களாக 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கிவிட்டது

இந்த நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் இன்று இந்த படத்தின் தனது பகுதிக்கான டப்பிங் பணியை முடித்துவிட்டார். இதனை அவர் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வரும் நவம்பர் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது என்று நேற்று தனுஷ் அறிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி, டோவினோ தமஸ், ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது.


 

More News

தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

பட்டாசு குறித்த வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

மீண்டும் ஆரவ்வுடன் ஓவியா: வைரலாகும் புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது ஓவியாவுக்கும் ஆரவ்வுக்கும் காதல் ஏற்பட்டதை அடுத்து ஆரவ், ஓவியாவின் காதலை நிராகரித்ததால் மனநிலை மாற்றம் அடைந்த ஓவியா நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினார்.

ஹவாய் தீவில் 'சர்கார்' படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் வழக்கம்போல் பல்வேறு தடைகளை தாண்டி வரும் தீபாவளி தினம் முதல் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

36 நாட்கள், சிங்கிள் ஷெட்யூல்: முடிந்தது சூர்யாவின் அடுத்த படம்

பிரபல நடிகர் சூர்யா திறமையான நடிகராக இருப்பது மட்டுமின்றி சினிமாவில் உள்ள திறமையான இளைஞர்களுக்கும் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வாய்ப்பு கொடுத்து வருவது தெரிந்ததே

ஒரே இயக்குனர் மீது தொடர் குற்றச்சாட்டு: 'சர்கார்' கதை விவகாரம் குறித்து தங்கர்பச்சான்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' கதை விவகாரம் ஒருவழியாக சமரசமாக தீர்க்கப்பட்டுவிட்டாலும் சமூக வலைத்தளங்களில் அவர் மீது தொடர்ந்து பலர் விமர்சனம் செய்து கொண்டு வருகின்றனர்.