close
Choose your channels

இளம் முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் த்ரிஷா

Friday, October 21, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொதுவாக கோலிவுட் திரையுலகில் நடிகைகளின் மார்க்கெட் நான்கு அல்லது ஐந்து வருடங்கள் மட்டுமே இருக்கும். ஆனால் த்ரிஷா, நயன்தாரா போன்ற ஒருசில நடிகைகள் மட்டுமே பத்து வருடங்களுக்கும் மேலாக மார்க்கெட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளனர்.
அந்த வகையில் கடந்த 14 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா, இப்போதும் இளம் ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது இளம் முன்னணி நடிகர் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக த்ரிஷா ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
விஜய்சேதுபதிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்த 'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம் இயக்கவுள்ள படத்தில்தான் விஜய்சேதுபதி-த்ரிஷா நடிக்கவுள்ளனர். இந்த படத்த நந்தகோபால் தயாரிக்கவுள்ளார்.
இந்நிலையில் அரவிந்தசாமியுடன் த்ரிஷா நடிக்கும் 'சதுரங்க வேட்டை 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.