close
Choose your channels

த்ரிஷாவின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Monday, July 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் கடந்த 2002ஆம் ஆண்டில் இருந்து சுமார் 15 வருடங்களுக்கும் மேல் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் நாயகியாக நடித்து வருபவர் த்ரிஷா. இளம் நடிகைகளுக்கு இணையாக இப்போதும் அவர் ஆறு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் த்ரிஷா நடித்து முடித்துள்ள 'மோகினி' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு தனுஷுடன் நடித்த 'கொடி' படத்திற்கு பின்னர் ரிலீசாகும் த்ரிஷாவின் தமிழ்ப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

த்ரிஷா, பூர்ணிமா பாக்யராஜ், சுரேஷ் யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை மாதேஷ் இயக்கியுள்ளார். இவர் விஜய் நடித்த 'மதுர' உள்பட ஒருசில படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை த்ரிஷா தற்போது அரவிந்தசாமியுடன் 'சதுரங்க வேட்டை 2', விஜய்சேதுபதியுடன் '96' மற்றும் 'கர்ஜனை', '1818' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.