close
Choose your channels

இதைவிட சிறப்பாக சொல்ல முடியாது: 'கில்லி' ரீ ரிலீஸ் குறித்து கவிதை வடிவில் சொன்ன த்ரிஷா..

Saturday, April 20, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த ’கில்லி’ திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் இந்த படம் குறித்து நடிகை த்ரிஷா தனது சமூக வலைதளத்தில் கவிதை வடிவில் சொன்ன பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

விஜய், த்ரிஷா நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி வெளியான ’கில்லி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், தமிழில் 50 கோடி ரூபாய் வசூலித்து சாதனை செய்த முதல் படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் அதிரடி ஆக்சன் காட்சிகள், விஜய் திரிஷா ரொமான்ஸ் காட்சிகள், அப்படி போடு பாடல் உள்பட அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியது ஆகியவை இந்த படத்தின் வெற்றிக்கு காரணம்.

இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதே ஏப்ரல் மாதம் மீண்டும் இந்த படம் ரீ ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழகம் முழுவதும் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படத்தின் முதல் நாள் வசூல் புதிய படங்களின் வசூலை விட அதிகமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த நிலையில் குறித்து நடிகை த்ரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் ’வாழ்க்கை மீண்டும் தொடங்கிய இடத்திலேயே வந்து நிற்கிறது என்பதை இதைவிட சிறப்பாக சொல்ல முடியாது, ’கில்லி’ முதல் நாள் முதல் காட்சி பிளாக்பஸ்டர் வைப்ஸ் உடன் இன்று நாள் விடிந்து உள்ளது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment