close
Choose your channels

வித்தியாசமான கேரக்டரில் த்ரிஷா நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு

Thursday, February 1, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல் நாயகியாகவும், இளம் நடிகைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பிசியாகவும் நடித்து கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் சமீபகாலத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்துள்ள 'மோகினி' விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் நடிகை த்ரிஷா தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'குற்றப்பயிற்சி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட பெண் துப்பறிவாளர் கதையம்சம் கொண்ட ஒரு படம் ஆகும்.

இந்தியாவின் முதல் பெண் துப்பறிவாளர் ரஜினி பண்டிட் அவர்கள் கடந்த 1980ஆம் ஆண்டு கையாண்ட ஒரு வழக்குதான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் பாலாவிடம் அசோசியட் இயக்குனராக இருந்த வெர்னிக் என்பவர் இயக்கவுள்ளார். மேலும் 'அர்ஜுன் ரெட்டி' படத்திற்கு இசையமைத்த ராதன் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். பாபுகுமாரி ஒளிப்பதிவில் மதன் படத்தொகுப்பில் பாலசந்தர் கலை இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தை ஜி.விவேகானந்தன் தயாரிக்கின்றார்.

அதிரடி ஆக்சன் காட்சிகளும், மர்மம் கலந்த த்ரில் காட்சிகளும் உடைய இந்த படம் த்ரிஷாவின் மற்றுமொரு வெற்றிப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.