close
Choose your channels

20 நாள் கழித்து விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த டிடிஎப் வாசன்.. விரட்டியடித்த கேப்டன் ரசிகர்..!

Friday, January 19, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேப்டன் விஜயகாந்த் டிசம்பர் 12ஆம் தேதி காலமான நிலையில் கிட்டத்தட்ட 20 நாட்கள் கழித்து டிடிஎஃப் வாசன் அவரது சமாதியில் அஞ்சலி செலுத்த வந்தார். அப்போது கேப்டன் ரசிகர் ஒருவர் அவரையும் அவரது ரசிகர்களையும் விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பைக்குகளை வேகமாக ஓட்டி அதை ஒரு சாதனையாக தனது சமூக வலை தளத்தில் வீடியோவாக பதிவு செய்து வந்த டிடிஎஃப் வாசன் சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கினார். இதனை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் அவரது டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில் அவர் விஜயகாந்த் சமாதியில் அஞ்சலி செலுத்த வந்தார். அஞ்சலி செலுத்திய பின்னர் அவருடைய ரசிகர்களுடன் அவர் செல்பி எடுத்துக் கொண்டிருந்தார். இதனை பார்த்த கேப்டன் ரசிகர் ஒருவருக்கு கடுப்பாகி டிடிஎஃப் வாசன் மற்றும் அவரது ரசிகர்களை சமாதியில் இருந்து விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது ’நீதிமன்றம், வழக்கு என்று அலைந்து கொண்டிருந்ததால் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்த வர முடியவில்லை என்று தெரிவித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் கேரளாவுக்கு செல்ல மட்டும் நேரம் இருந்ததா? என்று கேட்டபோது கையில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெறவே கேரளா சென்றதாக கூறிவிட்டு அவசர அவசரமாக இடத்தை காலி செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment