close
Choose your channels

2 மணி நேரம் மேக்கப்.. பல கிமீ நடந்து செல்லும் படக்குழு.. 'கங்குவா' படத்தின் ஆச்சரிய தகவல்..!

Monday, September 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த சில ஆச்சரியமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

‘கங்குவா’ படத்தின் பிளாஷ்பேக் காட்சிகள் கொடைக்கானல் மற்றும் ராஜமுந்திரி காடுகளில் படமாக்கப்பட்டதாகவும் இந்தப் பகுதியில் படப்பிடிப்பு நடத்திய இடத்தில் வாகனங்கள் செல்ல முடியாது என்பதால் படப்பிடிப்பு சாதனங்களை எடுத்துக்கொண்டு படக்குழுவினர் நடந்தே சென்றதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பிளாஷ்பேக் காட்சிகளுக்காக சூர்யா இரண்டு மணி நேரம் மேக்கப் போட்டுக் கொண்டார் என்றும் சூர்யாவுடன் நடித்த மற்ற கலைஞர்களுக்கும் மேக்கப் போட அதிக நேரம் ஆனதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் பிளாஷ்பேக் காட்சிகளை அடுத்து தற்கால காட்சிகள் கோவா, எண்ணூர் மற்றும் சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தற்போது சூர்யா மற்றும் திஷா பதானி காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

பாகுபலி, கேஜிஎப், ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்களில் பணிபுரிந்த கேமரா டீம் இந்த படத்தில் பணி செய்து வருவதாகவும் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் முடிவடையும் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து கிராபிக்ஸ் பணிகள் உள்பட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்து அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment