close
Choose your channels

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் வைல்ட்கார்டாக 'பேட்ட' நடிகர்!

Friday, April 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் சந்தோஷ் பிரதாப் வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மேலும் இரண்டு போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரி ஆகி உள்ளனர் என்பது புரமோ வீடியோவில் இருந்து தெரிய வந்துள்ளது. இதனால் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மேலும் சில ஒரு சில வாரங்கள் நீடிக்கும் என்பதால் பார்வையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

சமீபத்தில் வெளியான புரமோ வீடியோவில் இருந்து ’குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக ‘பேட்ட’, ’சார்பட்டா பரம்பரை’ உள்ளிட்ட படங்களில் நடித்த முத்துக்குமார் ஒரு போட்டியாளராக எண்ட்ரியாகி உள்ளார். இன்னொருவர் சின்னத்திரை பிரபலம் சுட்டி அரவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது வரவினால் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மேலும் மெருகேறும் என்பது மட்டுமின்றி மேலும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.