close
Choose your channels

உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸின் முக்கிய அறிவிப்பு!

Thursday, March 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக அறிவித்திருப்பது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள ’நெஞ்சுக்கு நீதி’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை மாரிசெல்வராஜ் இயக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சற்று முன்னர் தனது சமூக வலைத்தளத்தில் நாளை காலை 10 மணிக்கு ஒரு முக்கிய அறிவிப்பு என தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்ற ஆச்சரியம் ரசிகர்களுக்கு இருந்தாலும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தான் நாளை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்தப் படத்தில் பகத் ஃபாசில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளியான நிலையில் நாளைய அறிவிப்பில் இது குறித்த தகவலும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.