close
Choose your channels

'உறியடி' விஜயகுமாரின் அடுத்த படம்.. சீசனுக்கேற்ற மாஸ் டைட்டில்..!

Thursday, February 22, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’உறியடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிய நடிகர் விஜயகுமார், அதன் பிறகு ’உரியடி 2’ மற்றும் சமீபத்தில் வெளியான ’பைட்கிளப்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் விஜயகுமார் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது அந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

’உறியடி’ விஜயகுமார் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு ’எலக்சன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சீசனுக்கு ஏற்ற சரியான டைட்டில் என்று கருத்து கூறப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் இன்னும் ஒருசில வாரங்களில் இந்த படம் திரையரங்குகளில் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ’உறியடி’ விஜயகுமார் அரசியல்வாதியாக நடித்து வருகிறார். குறிப்பாக உள்ளாட்சி தேர்தல் குறித்த கதையம்சம் கொண்டது தான் இந்த படம் என்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இருந்து தெரிய வருகிறது.

இன்று வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் விஜயகுமார் வேஷ்டி சட்டை அணிந்து அரசியல்வாதி போல் இருக்கும் காட்சியும், ‘உள்ளாட்சித் தேர்தல் என்ற பதாகை போஸ்டரில் இருப்பதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment