close
Choose your channels

ரூ 190 கோடியில் பங்களா வாங்கிய நம்ம 'லெஜெண்ட்' ஹீரோயின்… சுவாரசியத் தகவல்!

Friday, June 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் சினிமாவில் பேஷன் ஐகான் என்ற பெயருடன் முன்னணி இடம்பிடித்திருக்கும் நடிகை ஒருவர் ஆடம்பர பங்களாவை விலைக்கு வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

பாலிவுட் சினிமாவில் ‘சிங் சாப் தி கிரேட்‘ எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நாயகிகளுள் ஒருவராக வலம்வருபவர் நடிகை ஊர்வசி ரவுடேலா. இவர் தமிழ் சினிமாவில் சரவணா ஸ்டோர் சரவணன் நடித்திருந்த ‘லெஜெண்ட்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். பான் இந்தியா திரைப்படமான இந்தப் படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.

மேலும் பேஷன் விஷத்தில் படு ஆர்வம் காட்டிவரும் இவர் தொடர்ந்து தனது ஆடைகளுக்காகவும் பெயர் பெற்று வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற 76 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் இவர் அணிந்திருந்த முதலை நெக்லஸ் மற்றும் ஃபார்பி பிங்க் ஆடை போன்றவை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

பாலிவுட் சினிமாவைத் தவிர கன்னடம், பெங்காலி மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கும் நடிகை ஊர்வசி ரவுடேலா தற்போது மும்பை ஜுஹு பகுதியில் 4 மாடிக் கொண்ட புதிய பங்களா ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. 190 கோடி மதிப்பு கொண்ட இந்த வீட்டில் ஆடம்பரமான தோட்டம், தனிப்பட்ட உடற்பயிற்சிக் கூடம், அலங்கார வேலைப்பாடுகள் என்று பல்வேறு வசதிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் மறைந்த பிரபல தயாரிப்பாளர் யாஷ் சோப்ராவின் பக்கத்து வீட்டைத்தான் நடிகை ஊர்வசி ரவுடேலா வாங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாலிவுட்டில ‘தில் ஹை கிரே‘ திரைப்படத்திலும் தெலுங்கில் ‘பிளாக் ரோஸ்’ திரைப்படத்திலும் நடித்துவரும் நடிகை ஊர்வசி ரவுடேலா புதிய பங்களா வாங்கி அதில் குடியேறி இருப்பதால் ரசிகர்கள் அவருக்குப் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.