நாட்டு மக்களுக்காக வைரமுத்து செய்த உதவி!

கொரோனா வைரஸ் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் தமிழக அரசுக்கும் உதவிகளும் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே. திரையுலக பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் உள்பட பலர் கோடி கணக்கில், லட்சக்கணக்கில் நிதி உதவி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை வைத்து சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் போதுமான இடம் இல்லாததால் தனியார்கள் பலரும் தங்களுடைய இடத்தை கொடுக்க முன்வந்துள்ளனர். குறிப்பாக கமலஹாசன் தனது ஆழ்வார்பேட்டை வீட்டையும், திமுக அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கையும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது திருமண மண்டபத்தையும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தங்கள் இடத்தை கொடுக்க முன் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்துவும் இதேபோல் ஒரு உதவியை நாட்டு மக்களுக்காக செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக எங்கள் திருமண மண்டபத்தை (பொன்மணி மாளிகை) அரசுக்கு ஒப்படைக்கிறேன் என்று முதலமைச்சருக்குக் கடந்த வாரம் கடிதம் எழுதியிருக்கிறேன். நாட்டின் நலமே நமது நலம்’ என்று கூறியுள்ளார்.

More News

12 வகையான தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி!

இரும்பு, சிமெண்ட், சுத்திகரிப்பு. சர்க்கரை, காகிதம், ரசாயனம், ஜவுளித்துறை, உரம், உருக்கு, கண்ணாடி, ஃபவுண்டரி உட்பட 12 துறைகளை சேர்ந்த தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசுஅனுமதி அளித்துள்ளது. 

அஜித்திற்கு 1.25 கோடி நன்றி தெரிவித்த தமிழ் திரைப்பட நடிகை

தல அஜித் அவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நிவாரண நிதியாக ரூபாய் ஒரு கோடியும் பெப்சி அமைப்பினர்களுக்கு ரூபாய் 25 லட்சமும் பிஆர்ஓ சங்கத்திற்கு ரூபாய் 2.5 லட்சமும் வழங்கியதாக வெளிவந்த

சுனில் கவாஸ்கர் கொடுத்த ரூ.59 லட்சம் நிதியுதவி: ஒரு சுவாரஸ்ய கணக்கு

கடந்த சில நாட்களாக கொரோனா வைரசுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் தொடர்ச்சியாக போராடி வரும் நிலையில் மத்திய மாநில அரசுகளுக்கு கைகொடுக்கும் வகையில்

தமிழகத்தில் கொரோனா வைரஸ்: நேற்றைவிட இன்று அதிகமானதால் பரபரப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 69 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துரை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் சார்பில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய நடிகை த்ரிஷா

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சராசரியாக தினமும் 50க்கும் மேல் உயர்ந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.