மோடியின் சுனாமியில் சிக்காத தமிழகம்: வைரமுத்து

  • IndiaGlitz, [Friday,May 24 2019]

வட இந்தியா முழுவதும் மோடி அலை வீசிய நிலையில் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. தமிழகத்தின் எம்பிக்களுக்கு அமைச்சரவையில் இடம் இல்லை என்றாலும் பாஜக எதிர்ப்பு அலை தொடர்ந்து தமிழகத்தில் வீசும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய கவிஞர் வைரமுத்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, இந்தியா முழுவதும் பாஜக திகைப்புக்குரிய வெற்றி பெற்றுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் திமுக வியப்புக்குரிய வெற்றி பெற்றுள்ளது. இந்தியா முழுக்க ஒரு சுனாமி அலை பாய்ந்திருக்கின்றது. இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மாநிலங்கள் அந்த சுனாமி அலைக்கு நனைந்திருந்தபோது, அந்த சுனாமியில் நனையாத சில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாக இருப்பது பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய கொள்கைவாதிகளுக்கு கிடைத்த வெற்றியாக நான் கருதுகிறேன்.

இந்த வெற்றி திராவிட இயக்க கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றி என்று கொண்டாடலாம். ஆனால் வாக்கு வித்தியாசத்தை பார்க்கும்போது தளபதியின் உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக நான் கருதுகிறேன். திராவிட இயக்கங்கள் முன்னிலும் வலிமையாக, முன்னிலும் எழுச்சியாக முன்னிலும் கொள்கை பேசும் கூட்டமாக திகழ வேண்டிய காலத்தில் இப்போது நாம் நிற்கிறோம். இந்த வெற்றியை தமிழர்கள் கொண்டாட வேண்டும். தமிழர்கள் தங்களை காத்துக்கொண்ட ஒரு கவசமாக இந்த வெற்றியை நான் கருதுகிறேன்.

இவ்வாறு வைரமுத்து கூறினார்.

More News

பாரதிராஜா படத்தை புரமோஷன் செய்யும் தனுஷ்!

இயக்குனர் இமயம் பாரதிராஜா முக்கிய வேடத்திலும் சசிகுமார் நாயகனாகவும் நடித்துள்ள திரைப்படம் 'கென்னடி கிளப்'.

சூர்யாவின் பெண் ரசிகைகளுக்கு ஸ்பெஷல் காட்சி: எந்த தியேட்டரில் தெரியுமா?

பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும்போது அந்த நடிகர்களின் பெண் ரசிகைகளுக்கு என ஒரு ஸ்பெஷல் காட்சி திரையிடப்படுவது கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாகி வருகிறது.

டாப்சியின் 'கேம் ஓவர்' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல்

நடிகை டாப்சி நடித்து வந்த 'கேம் ஓவர்' திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் தயாராகி வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரானது

யோகிபாபுவின் 'தர்மபிரபு' ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகிய யோகிபாபு முதல்முறையாக முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் 'தர்மபிரபு

கமல், சீமான் கட்சிகள் இருபெரும் சக்தியாக உருவெடுக்கும்: பிரபல இயக்குனர்

அதிமுக, திமுக மீது கடந்த பல ஆண்டுகளாக அதிருப்தியில் இருக்கும் தமிழக மக்களின் ஒருபிரிவினர் இந்த இரண்டு கட்சிகளுக்கும் மாற்றுக்கட்சிகளுக்காக ஏங்கி கொண்டிருந்தனர்.