close
Choose your channels

டாப்சியின் 'கேம் ஓவர்' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல்

Friday, May 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை டாப்சி நடித்து வந்த 'கேம் ஓவர்' திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் தயாராகி வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரானது

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ்ப்பதிப்பிற்கு சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் வரும் ஜூன் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டாப்சி, வினோதினி, அனிஷ் குருவில்லா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரான் எதாம் யோகன் இசையமைத்துள்ளார். நயன்தாரா நடித்த 'மாயா' திரைப்படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஒய்.நாட் ஸ்டுடியோ சசிகாந்த் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.