'பொன்னியின் செல்வன்' பாடல்களில் வைரமுத்து செய்யப்போகும் புதுமை!

கல்கி எழுதிய காலத்தால் அழியாத காவிய நாவலான ‘பொன்னியின் செல்வன்’, மணிரத்னம் அவர்களால் இரண்டு பாகங்களாக திரைப்படமாகவுள்ளது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி, அருள்மொழிவர்மன் கேரக்டரில் ஜெயம் ரவி, பூங்குழலி கேரக்டரில் நயன்தாரா, சுந்தரசோழன் கேரக்டரில் அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், நந்தினி வேடத்தில் ஐஸ்வர்யா ராய், பழுவேட்டரையர் வேடத்தில் சத்யராஜ் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க அவர் கம்போஸ் செய்யும் டியூன்களுக்கு ஏற்ற வகையில் பாடல்களை கவியரசு வைரமுத்து எழுதவுள்ளார். ‘பொன்னியின் செல்வன்’ நாவல் நடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ் சொற்களை இந்த கால இளைஞர்களுக்கும் புரியும் வகையில் பாடல் வரிகளில் வைரமுத்து புதுமை செய்யவிருப்பதாகவும் தெரிகிறது. மேலும் இந்த படத்திற்காக வைரமுத்து 12 பாடல்கள் எழுதவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ரவிவர்மன் ஒளிப்பதிவில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கவிருப்பதாகவும், இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

More News

எங்களுக்கு ஊக்கம் அளித்து உள்ளீர்கள்: இஸ்ரோவுக்கு நாசா பாராட்டு!

நிலாவை இன்னும் சில நாடுகள் பூமியில் இருந்து அண்ணாந்து மட்டுமே பார்த்து கொண்டிருக்கும் நிலையில் இந்திய விஞ்ஞானிகளின் சீரிய முயற்சியால் நிலாவிற்கு மிக அருகில் அதாவது

மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி காலமானார்!

இந்தியாவின் மூத்த வழக்கறிஞரும் முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான ராம் ஜெத்மலானி உடல்நலக்குறைவு காரணமாக இன்று டெல்லியில் காலமானார்.அவருக்கு வயது 95.

வனிதாவை செமையாய் கலாய்க்கும் கமல்!

பிக்பாஸ் வீட்டில் வனிதா பேச ஆரம்பித்துவிட்டால் அவர் பேசி முடிக்கும் வரை வேறு யாரும் பேச முடியாது. யாராவது பேச முற்பட்டாலும் 'ஒன் மினிட்', 'நான் என்ன சொல்ல வர்ரேன்னா'

சேரன் வெளியேற்றமா? சீக்ரெட் அறையா?

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் உள்ள ஐவரில் சேரனுக்கு குறைவான வாக்குகள் கிடைத்திருந்ததால் அவர் வெளியேற வாய்ப்பு இருந்ததாக வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை ஒரே நேரத்தில் ஏ.எல்விஜய் 'தலைவி' என்ற பெயரிலும் பிரியதர்ஷினி என்ற இயக்குனர் 'தி அயர்ன் லேடி'என்ற