close
Choose your channels

எலிசபெத்திடம் வருத்தம் தெரிவித்த வனிதா: வைரலாகும் வீடியோ

Wednesday, October 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர் பால் என்பவருடன் வனிதாவிஜயகுமாருக்கு திருமணம் நடந்ததாகக் கூறப்பட்ட நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத், மீடியா மூலம் காரசாரமாக பேட்டி அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

தன்னுடைய கணவரை வனிதா கைப்பற்றி விட்டார் என்றும் தனக்கும் தன்னுடைய குழந்தைகளுக்கும் பீட்டர்பால் துரோகம் செய்துவிட்டார் என்றும் எலிசபெத் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி வடபழனி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது

இந்த நிலையில் தற்போது பீட்டர்பாலை பிரிந்துவிட்டதாக வனிதா வெளியிட்டுள்ள வீடியோவில் எலிசபெத் அவர்களிடம் வனிதா வருத்தம் தெரிவித்துள்ளார். உங்களுடைய கணவரை நான் கைப்பற்ற வேண்டும் என்று ஒருநாளும் நான் எண்ணவில்லை என்றும் நீங்களும் அவரும் தனித்தனியாக பிரிந்துதான் வாழ்ந்து கொண்டிருந்தீர்கள் என்றும் அதனால்தான் பீட்டர் பாலுடன் எனக்கு உறவு ஏற்பட்டது அவர் கூறினார்

மருத்துவமனையில் பீட்டர்பால் உயிருக்காக போராடிக்கொண்டிருந்த போது மனைவி என்ற ஸ்தானத்தில் இருந்து நான் கையெழுத்து போட முடியாத நிலையில், உங்களுக்கு தகவல் தெரிவித்தேன் என்றும் உங்கள் மகனுக்கும் தகவல் தெரிவித்தேன் என்று நீங்கள் இருவருமே எந்தவிதமான ரெஸ்பான்ஸும் செய்யவில்லை என்றும் வனிதா அந்த வீடியோவில் கூறியுள்ளார்

மேலும் உங்களை நான் ஏதாவது ஒரு விதத்தில் மனக்காயப்படுத்தி இருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நீங்கள் பீட்டர்பாலுடன் வாழ விருப்பப்பட்டால் தாராளமாக வாழலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உங்களையும் பீட்டரையும் பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு என்றுமே இருந்தது இல்லை என்றும், எனக்கும் உங்களுக்கும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்றும் நீங்கள் மீடியாவிடம் சென்றதால் தான் இவ்வளவு பெரிய பிரச்சனை ஏற்பட்டது என்றும் என்னிடம் தனிப்பட்ட முறையில் நீங்கள் பேசி இருந்தால் இந்த பிரச்சினையே எழுந்திருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் நான் எவ்வளவு பார்த்து விட்டேன் இன்னும் எவ்வளவோ பார்க்க தயாராக இருக்கிறேன் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன் என்று வனிதா விஜயகுமார் அந்த வீடியோவில் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.