close
Choose your channels

ஐபிஎல் பார்க்க சென்ற வரலட்சுமி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

Monday, May 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் திருவிழா நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில் நேற்று நடைபெற இருந்த இறுதி போட்டி மழை காரணமாக இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே இறுதி போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளை தமிழ் திரையுலக பிரபலங்கள் பார்த்து வருகின்றனர் என்பதும் சென்னை சேப்பாக்கம் மைதானம் மட்டுமின்றி இந்தியாவில் எந்த இடத்தில் சிஎஸ்கே விளையாடும் போட்டி நடந்தாலும் தமிழ் திரையுலக நட்சத்திரங்களை பார்க்க முடியும் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நேற்று நடைபெற இருந்த போட்டியை பார்க்க பல திரையுலக பிரபலங்கள் அகமதாபாத் மைதானத்தில் குவிந்தனர். குறிப்பாக நேற்றைய போட்டியை காண நடிகை வரலட்சுமி, இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உட்பட பலர் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் நடிகை வரலட்சுமி தான் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் பெற்றுள்ளதை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த டிக்கெட்டில் இருந்து அந்த டிக்கெட்டின் மதிப்பு ரூ.50,000 என்பது தெரிய வந்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அழைத்து உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.