close
Choose your channels

வரலட்சுமி கூட்டணியில் மிஸ் ஆன த்ரிஷா!

Tuesday, July 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் கண்டு ரசிக்க கோலிவுட் நடிகைகளான த்ரிஷா, வரலட்சுமி மற்றும் பிந்துமாதவி ஆகியோர் சென்றிருந்தனர். இதுகுறித்த புகைப்படமும் வரலட்சுமியின் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை லீக் போட்டி பிர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியையும் நேரில் கண்டு ரசிக்க வரலட்சுமி மற்றும் பிந்துமாதவி சென்றுள்ளனர். மைதானத்தின் நுழைவு வாயில் அருகே இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் வரலட்சுமியின் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த புகைப்படத்தில் த்ரிஷா இல்லை என்பதால் அவர் நாடு திரும்பியிருக்கலாம் என கருதப்படுகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததால் அந்த போட்டியை நேரில் ரசித்த வரலட்சுமி கூட்டணி ஏமாற்றம் அடைந்திருப்பார்கள். ஆனால் இன்று இந்திய அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்தியாவின் வெற்றியை நேரில் கண்டு ரசிக்க வரலட்சுமிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.