close
Choose your channels

'வாரிசை அடுத்து மாஸ் தமிழ் நடிகரின் படத்தை தயாரிக்கும் தில் ராஜூ.. செம அப்டேட்

Tuesday, December 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு திரை உலகின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு முதல்முறையாக தளபதி விஜய் நடித்த 'வாரிசு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அடியெடுத்து வைத்தார் என்பதும் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே.

இதனையடுத்து அவர் தொடர்ச்சியாக தமிழ் திரைப்படங்களை அதிகம் தயாரிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது தமிழ்த் திரையுலகின் இன்னொரு மாஸ் நடிகரான சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தில் ராஜூ தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் படத்தை பிரபல தெலுங்கு தெலுங்கு இயக்குனர் ஹரி ஷங்கர் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே பவன் கல்யாண், அல்லு அர்ஜுன் நடித்த சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது முதல் முறையாக தமிழுக்கு வருகிறார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் ’மாவீரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.