close
Choose your channels

'பாத்து செய்யுங்க'.. சன் டிவிக்கு வேண்டுகோள் விடுத்த வெங்கட் பிரபு..!

Thursday, February 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ திரைப்படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு சன் குருப்பிடம் ’பாத்து செய்யுங்க’ என்று தனது சமூக வலைதளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பில் விறுவிறுப்பாக வெங்கட் பிரபு இருக்கும் நிலையில் சன் மியூசிக் சேனலில் அவரது இயக்கத்தில் உருவான 'சென்னை 600028’ படத்தின் ட்ரெண்டிங் காட்சி ஒன்றை பதிவு செய்துள்ளது.

மேலும் இந்த பதிவுக்கு வெங்கட் பிரபு கமெண்ட் செய்தால் இந்த படத்தில் இடம்பெற்ற பாடலை முழுமையாக சன் மியூசிக் சேனலில் ஒளிபரப்பாகும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை பார்த்த வெங்கட் பிரபு ’பாத்து செய்யுங்க’ என்று கமெண்ட் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ’சென்னை 600028’ என்ற திரைப்படம் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது என்பதும் இதனை அடுத்து 2016 ஆம் ஆண்டு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் மூன்றாம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ’கோட்’ படத்தை இயக்கி வரும் இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.